Changes

மழைநீர் சேகரிப்பு

1,677 bytes added, 11:38, 9 June 2014
மழைநீர் சேகரிப்பு - இந்தியா
====மழைநீர் சேகரிப்பு - இந்தியா====
[[File:200px-TemplePondChennai.jpg|200px|thumb|right|சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் எழில்மிகு தெப்பக்குளம்]]
மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கிய முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு மாநிலம். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் 50,000 மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கள் நிறுவப்போவதாக சென்னை நகர மேயர் 2014 மே 30-ம் தேதி அறிவித்தார். [http://timesofindia.indiatimes.com/city/chennai/50000-rain-water-harvesting-structures-to-come-up-in-Chennai/articleshow/35794531.cms]
 
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4,000 தெப்பக்குளங்கள் உள்ளன. இந்த தெப்பக்குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல தெப்பக்குளங்களும் தூர்வாரி சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் தான் தற்போது உள்ளது.
 
அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து சென்னை நகரில் உள்ள சுமார் 40 தெப்பக்குளங்களை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் மழைநீர் சேகரிப்புக்கு இந்த குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்.[http://infochangeindia.org/environment/news/temple-tanks-in-tamil-nadu-to-harvest-rainwater.html]
<font color="#555555" size="3">'''மழைநீர் சேகரிப்பை கடைப்பிடிப்பது இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.:'''</font>
177
edits